யுவன் தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார் சிலம்பரசன்

யுவனின் சங்கர் ராஜா 'ஸ்வீட் ஹார்ட்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
யுவன் தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார் சிலம்பரசன்
Published on

யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. தற்பொழுது விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார்.

தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com