சர்தார் 2 - வில் இணைந்த எஸ்.ஜே சூர்யா

சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது.இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
சர்தார் 2 - வில் இணைந்த எஸ்.ஜே சூர்யா
Published on

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சர்தார் 2 திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com