லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி'

'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி'
Published on

 வேட்டையன் படத்திற்கு பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில் தற்பொழுது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் கூலி  என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com