இன்று மாலை வெளியாகும் 'தலைவர் 171' படத்தின் ப்ரோமோ

. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது
இன்று மாலை வெளியாகும் 'தலைவர் 171' படத்தின் ப்ரோமோ
Published on

ரஜினி வேட்டையன் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை டைட்டில் மற்றும் காட்சி முன்னோட்டம் வெளியாகும் நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது துணை இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com