இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.. ஷாருக்கானை முந்திய விஜய்

கோட் படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்குகிறார்.
Vijay - Shah Rukh Khan
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். தளபதி 69 படத்தை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார். தற்போது நடிகர் ஷாரூக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com