

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.21ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியா முழுவதும் ரூ.330 கோடி வசூலைத் தாண்டி, தற்போதுவரை வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பெத்லகேம் குடும்ப யூனிட் வெளியான 37 நாட்களில் ரூ.330 கோடி வசூலித்து, மலையாளத்தில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, கல்யாணி ப்ரியதர்ஷனின் லோகா திரைப்படமே மலையாளத்தில் அதிகம் வசூல் செய்தப் படமாக இருந்தது.
மேலும் அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படம் என்ற மோகன்லாலின் ‘நரசிம்மம்’ பட சாதனையையும் முறியடித்ததாகக் கூறப்படுகிறது .