

நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம்தான் மலையாள திரையுலகில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது.
காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வெளியான 24 நாட்களில் உலகளவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உலகளவில் ரூ.300 கோடியை வசூல் செய்த இரண்டாவது மலையாள படமாக இருந்தாலும், லோகாவைவிட வேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
கிரிஷ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வினய் ஃபோர்ட் ஆகியோர் நடித்துள்ள படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.
ஃபஹத் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ், பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் ஒர்க்கிங் கிளாஸ் ஹீரோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.