

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நீலம் ஸ்டியோ தயாரிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் களமாடன்.
இப்படம் புகழ்பெற்ற இந்தியக் கபடி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான மணத்தி பி. கணேசனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி பயோபிக் பாணியில் உருவாக்கப்பட்டது.
1990களின் பின்னணியில், தென் தமிழக கிராமப்புறப் பகுதிகளில் நிலவிய சாதியப் பாகுபாடுகள், வன்முறைகள் மற்றும் குடும்பச் சூழல்களைக் கடந்து, 'கிட்டான்' என்ற இளைஞன் தனது கபடி கனவை நோக்கி எவ்வாறு பயணித்தான் என்பதை மாரி செல்வராஜ் உணர்வுப்பூர்வமாக இயக்கியிருந்தார்.இந்த நிலையில் படம் வெளியாகி ஓராண்டை நிறைவுசெய்துள்ளது.
நிவாஸ் கே.பிரச்சன்னா இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சுமார் ₹30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், உலகளவில் ₹67 கோடிக்கும் மேல் வசூலித்து வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது
தற்போது ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, சமூக வலைத்தளங்களில் படக்குழுவினரும் ரசிகர்களும் #1YearOfBison என்ற ஹாஷ்டேக்குடன் தங்களது வாழ்த்துகளையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.