தொழில்நுட்பம்

ஐரோப்பாவில் பெயர் மாற்றத்துடன் களமிறங்கும் டெஸ்லா: 'FSD' பெயரைக் கைவிட்டு புதிய ஒப்புதலுக்கு முயற்சி

ஜெர்மனி உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து அமைச்சகங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது புகழ்பெற்ற 'ஃபுல் செல்ப்-டிரைவிங்' (Full Self-Driving-FSD) என்ற பெயர ஐரோப்பிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது. இனி ஐரோப்பிய நாடுகளின் இணையதளங்கள் மற்றும் விளம்பரங்களில் இப்பெயருக்குப் பதிலாக 'டெஸ்லா அசிஸ்டெட் டிரைவிங்' என்ற புதிய பெயர் பயன்படுத்தப்படவுள்ளது.

பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது புகழ்பெற்ற 'ஃபுல் செல்ப்-டிரைவிங்' (Full Self-Driving-FSD) என்ற பெயர ஐரோப்பிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது. இனி ஐரோப்பிய நாடுகளின் இணையதளங்கள் மற்றும் விளம்பரங்களில் இப்பெயருக்குப் பதிலாக 'டெஸ்லா அசிஸ்டெட் டிரைவிங்' என்ற புதிய பெயர் பயன்படுத்தப்படவுள்ளது.

கார்கள் முழுமையாகத் தாமாகவே இயங்கும் என்ற தோற்றத்தை இந்தத் தலைப்பு உருவாக்குவதாகவும், இது ஓட்டுநர்களைத் திசைதிருப்பக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் போக்குவரத்து அமைச்சகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து தெரிவித்து வந்ததே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.

அமெரிக்காவில் 'FSD (Supervised)' என்ற பெயரில் டெஸ்லா தனது ஓட்டுநர் உதவித் தொழில்நுட்பத்தை வழங்கி வந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் வாகனப் பாதுகாப்பு மற்றும் சட்ட விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவை. இத்தொழில்நுட்பம் முழுமையான தன்னாட்சி ஓட்டுநர் வசதியைக் கொண்டிருக்கவில்லை என்பதால், ஓட்டுநர் எப்போதும் விழிப்புடன் வாகனத்தைக் கண்காணிக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்தத் தடைகளைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தனது தொழில்நுட்பத்திற்கு அனுமதியைப் பெறும் நோக்கத்துடன், டெஸ்லா நிறுவனம் இந்த பெயர் மாற்றத்தை ஒரு சமரச நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய சந்தையில் டெஸ்லா

ஜெர்மனி உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து அமைச்சகங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற சில நாடுகள் ஏற்கனவே இதற்கு முன்னோட்ட அனுமதி வழங்கி உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் டெஸ்லா அசிஸ்டெட் டிரைவிங் சேவையை விரிவுபடுத்துவதற்கான தடைகளை இது விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT