

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, மைக்ரோசாஃப்ட் , அடோப் மற்றும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை தொழிலாளர்களுக்கான கிரீன் கார்டு விண்ணப்பத் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்கத் துணைத் தலைவரும், விசா முறைகேடு தடுப்புப் பிரிவின் தலைவருமான ஜே.டி. வான்ஸ் முன்னிலையில் தொழிலாளர் நலத்துறைச் செயலர் கீத் சோண்டர்லிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தகுதியான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் இந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மைக்ரோசாப்ட் ஒரு சிறந்த அமெரிக்க நிறுவனம் என்றாலும், முதலில் அமெரிக்க ஊழியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் நிறுவனம் செழிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், ஆனால் அது உங்கள் சக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களை மேம்படுத்துவதன் மூலம் செழிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் தவிர, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல், காக்னிசண்ட் போன்ற பிற பெரிய நிறுவனங்களும் இந்த PERM திட்ட இடைநீக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.