சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு, மொபைல், தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபகரணங்களை தயாரித்து வருகிறது.
சாம்சங் நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகை வாட்சுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பட்ட மருத்துவ கண்காணிப்பை வழங்குகிறது.
இந்த நிலையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஜெர்மன் டிஜிட்டல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான அல்செடிஸூடன் இணைந்து பயனர்களின் மருத்துவ தரவுகளை ஆராயும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்சை வடிவமைக்க உள்ளது.
இதன்மூலம் சாம்சங் பயனாளர்கள் தங்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சாம்சங் பயனாளர்கள் சோர்வு, தலைசுற்றல் ஆகிய அறிகுறிகளுடன் இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றங்களை(AFib) கண்காணிக்க உள்ளது.
மேலும் சாம்சங் பயனாளர்களின் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) தரவு, மற்றும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் (SpO2) அளவீடுகளையும் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.
பயனாளர்கள் தங்களின் தூக்கத்தின் போது அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் மூச்சுத்திணறலை கண்காணிக்கவும் தூக்க அளவீடுகள்(OSA) இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.