உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களில் ஆந்த்ரோபிக் நிறுவனம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் Calude AI பெருமளவில் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் ஆந்த்ரோபிக் உருவாகி வரும் புதிய ஏஐ மாடல் குறித்த விவரங்கள் அண்மையில் கசிந்தன.
நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பில் (CMS) ஏற்பட்ட மனிதத் தவறு காரணமாக, இந்த மாடல் குறித்த 3,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் கசிந்துள்ளன.
இதன்படி புதிய மாடல், Claude Mythos மற்றும் Claude Capybara என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இது தற்போதுள்ள Claude Opus 4.6 மாடலை விட மிக திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
Mythos மாடல் Coding, Reasoning மற்றும் சைபர் பாதுகாப்பு சோதனைகளில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாம்.
குறிப்பாக இந்த ஏஐ மாடல், மென்பொருள்களில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து ஊடுருவுவதில் மனிதர்களை விடவும், பிற ஏஐகளை விடவும் மிக வேகமாகச் செயல்படும் திறன் கொண்டது.
தற்போதுள்ள சைபர் பாதுகாப்பு அரண்களை ஹேக்கர்கள் எளிதில் ஊடுருவ உதவும் அளவுக்கு வலிமையானது
எந்த அளவுக்கு என்றால் இந்த மாடலை வெளியிட்டால் சைபர் பாதுகாப்பு துறையில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என அதை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனமே அஞ்சுவதாக கூறப்படுகிறது.
மிதோஸ் குறித்த தகவல்கள் கசிந்துள்ள நிலையில் அச்சத்தால் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் சைபர் பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகளில் பெரும் சரிவை சந்தித்தன.
நேற்று (மார்ச் 27) ஒரே நாளில் சுமார் 14.5 பில்லியன் டாலர் சந்தையில் இருந்து துடைத்தெரியப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹேக்கிங் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, ஆந்த்ரோபிக் இந்த மாடலை முதலில் சைபர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் கோடிங்குகளைப் பலப்படுத்திக்கொள்ள முடியும்.