இனி ஆசிரியர் வேலைக்கும் ஆப்பு?.. மெலனியா டிரம்ப் அறிமுகம் செய்த AI ரோபோவால் வெடித்த சர்ச்சை | Plato

அறிவியல், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களை 11 வெவ்வேறு மொழிகளில் கற்பிக்கும் திறன் கொண்டது.
இனி ஆசிரியர் வேலைக்கும் ஆப்பு?.. மெலனியா டிரம்ப் அறிமுகம் செய்த AI ரோபோவால் வெடித்த சர்ச்சை | Plato
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய மனைவி மற்றும் நாட்டின் முதல் பெண்மணியாக மெலனியா டிரம்ப் உள்ளார்.

இவர் நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற 'Fostering the Future Together' என்ற சர்வதேச உச்சிமாநாட்டில் Plato என்ற அதிநவீன மனித உருவ ஏஐ ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ரோபோவுடன் மெலனியா மேடையில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Figure என்ற ஏஐ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, மாணவர்களுக்கு ஒரு தனிப்பட்ட(Personalized) ஆசிரியர் போலச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெலனியா கூற்றுப்படி, இந்த ரோபோ வெறும் தகவல்களை மட்டும் வழங்காமல், மாணவர்களின் மனநிலை மற்றும் கற்கும் வேகத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பாடம் நடத்தும்.

அறிவியல், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களை 11 வெவ்வேறு மொழிகளில் கற்பிக்கும் திறன் கொண்டது.

இதுவே கல்வித் துரையின் எதிர்காலம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"கல்வி என்பது வெறும் தரவுகளைப் பதிவிறக்கம் செய்வது மட்டுமல்ல; குழந்தைகளுக்குப் பரிவு மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது. ஒரு இயந்திரத்தால் ஒருபோதும் மனித உணர்வுகளை வழங்க முடியாது" என்று கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.

ஏஐ தொழில்நுட்பம் ஆசிரியர்களின் இடத்தை நிரப்பினால், மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

இதற்கிடையே 2027 க்குள் கோடிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற பல துறைகள் முழுமையாக ஏஐ வசமாகும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com