கூகுள் நிறுவனம், மென்பொருள் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியான ஜெமினி 4 கார்பனை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெமினி 4 ஆர்கான் (Gemini Argon 4) என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்தது.
ஜெமினி 4 ஆர்கன் செயற்கை நுண்ணறிவு செயலியானது சிக்கலான பல படிநிலை பொறியியல் பணிகளை நீண்ட காலத்திற்கு கையாளும் வகையில் வடிமைக்கப்பட்டு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் ஜெமினி 4 ஆர்கனை விட பல மடங்கு வேகத்தில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரியான ஜெமினி 4 கார்பன் (Gemini 4 Carbon) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜெமினி 4 கார்பன் அதன் முந்தையை பதிப்பான ஆர்கனை விட செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு குறியீட்டில் 59 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த மாதிரியின் கருத்துகளை சேகரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திய பிறகு, கூகுள் நிறுவனம் கார்பன் செயற்கை நுண்ணறிவை வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு கிடைக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெமினி 4 கார்பன் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கூறுகையில், எங்களது அடுத்தகட்ட மாடலான ஜெமினி 4 கார்பனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
ஜெமினி 4 கார்பன் செயற்கை நுண்ணறிவானது, பெரிய குறியீட்டு தொகுப்புகள் மற்றும் கீழ்நிலை அமைப்புகள் முழுவதும் உள்ள பிழைகளின் மூல காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரிசெய்வது உட்பட, தொழில்நுட்ப சிக்கல்களை ஆராய்ந்து தீர்க்கும் திறன் கொண்டது என கூகுள் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட ஜெமினி 4 ஆர்கன் பதிப்பு, செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு குறியீட்டில் 50 புள்ளிகளை பெற்றிருந்தது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜெமினி 4 கார்பன் மாதிரியானது, செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு குறியீட்டில் 59 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.