வெனிசுலாவில் நேற்று முன் தினம் மாலை 7.1 மற்றும் 7.5 ரிக்டர் என்ற அளவில் சில நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதில் தலைநகர் காரகஸ் உட்பட பலவேறு இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் சீட்டுக் கட்டுபோல சரிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மக்கள் தங்கள் உயிரை காக்க கடைசி நொடியில் அலறியடித்து கட்டிடங்களில் இருந்து வெளியேறும் வீடியோக்களும் வெளியாகின.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 188 பேர் உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் எச்சரிக்கை
இந்நிலையில் முதல் நிலநடுக்கம் மாலை 6.04 மணிக்கு ஏற்படுத்துவதற்கு சற்று முன் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலுக்கு கூகுள் நிறுவனத்திடமிருந்து நிலநடுக்க எச்சரிக்கை அறிவிப்பு வந்ததாக உயிர்தப்பிய பலர் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம்
பொதுவாக நிலநடுக்கத்தின் முதன்மை அலைகள் (பி-அலைகள்), இரண்டாம் அலைகள் (எஸ்-அலைகள்) என்ற நிலையில் தனித்தனியே வருகின்றன.
விநாடிக்கு 6 கிமீ வேகத்தில் மிக வேகத்தில் பயணிக்கும் பி-அலைகளால் பாதிப்பு இல்லை. இதனை தொடர்ந்து வரும் எஸ்-அலைகள் தான் அழிவை ஏற்படுத்துன.
அக்ஸிலரோமீட்டர்
ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் அக்ஸிலரோமீட்டர் என்ற மிக முக்கிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் மிகச்சிறிய அளவிலான அதிர்வுகளையும் துல்லியமாகக் உணர முடியும். இந்த சென்சார் நிலநடுக்கம் ஏற்படும் போது உருவாகும் ஆரம்பகட்ட அதிர்வுகளை இந்த சென்சார் கண்டறிந்து அந்த சிக்னலை அது பதிவான இடத்தின் விவரத்துடன் கூகுளின் ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பிற்கு அனுப்புகிறது.
சிக்னல்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு மொபைலில் இருந்து அதிர்வு சிக்னல் வந்தவுடன், கூகுளின் சர்வர்கள் அந்தப் பகுதியில் உள்ள மற்ற ஆண்ட்ராய்டு போன்களையும் ஆராய்ந்து அதேபோல அதிர்வு சிக்னல்கள் அந்த பகுதியில் வருகிறதா என கண்காணிக்கும்.
அப்படி நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் இருந்து சிக்னல்கள் வந்தால் கூகுள் சர்வர்கள் அதை கண்டறிந்து அந்தப் பகுதி மக்களுக்கு அலர்ட் அனுப்புகிறது.