அறிந்து கொள்ளுங்கள்

ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டா நிறுவனத்திற்கு போட்டியாக ‘ஜெமினி ஏஜெண்ட்’ - கூகுள் கிளவுட் அறிவிப்பு

ஜெமினி ஏஜெண்ட் ஜிமெயில், டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் காலண்டர் உள்ளிட்ட கூகுள் வொர்க்ஸ்பேஸ் செயலிகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் கிளவுட் நிறுவனம் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், பணிகளை கையாளவும் ஒற்றை செயற்கை நுண்ணறிவு முகவரான ‘ஜெமினி ஏஜெண்ட்டை’, ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டா நிறுவனத்திற்கு போட்டியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓபன் ஏ.ஐ2 (Open AI) நிறுவனம் கடந்த செப்டம்பரில், பயனர்களின் இலக்குகளை தானாகவே பின்தொடரும் வகையில் ‘டாட்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகம் செய்தது.

இதையடுத்து பயனர்கள் தங்கள் பொருட்களை வாங்கவும், பயணங்களை முன்பதிவு செய்யவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் மற்றும் பணம் செலுத்தவும் ‘மியூஸ்’ என்ற ஏ.ஐ செயலியை மெட்டா (Meta) நிறுவனம் வெளியிட்டது.

ஜெமினி ஏஜெண்ட்

இந்த நிலையில் ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக ஆல்பபெட் நிறுவனம் ‘ஜெமினி ஏஜெண்ட்’ (Gemini Agent) எனப்படும் செயற்கை நுண்ணறிவை வெளியிட்டுள்ளது.

இந்த ஜெமினி ஏஜெண்ட் ஏ.ஐ தளம், பணிகளை திட்டமிட்டு, ஒரு நிறுவனத்தின் வணிக அமைப்புகளுடன் இணைந்து, முடிக்கப்பட்ட பணிகளை ஆவணங்கள், மின்னஞ்சல் மற்றும் டெவலப்பர் சூழல்களில் வழங்கும் என கூகுள் கூறியுள்ளது.

ஜெமினி ஏஜெண்ட் சிறப்பம்சம்

மேலும் இது, ஜிமெயில், டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் காலண்டர் உள்ளிட்ட கூகுள் வொர்க்ஸ்பேஸ் செயலிகளுக்குள் நேரடியாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மைக்ரோசாஃப்ட் 365 மற்றும் ஸ்லாக் மூலமாகவும் பயன்படுத்தலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஒவ்வொரு பணிக்கும் சிறந்த மாதிரியை தேர்ந்தெடுக்கிறது; தற்போது கூகுளின் ஜெமினி மாதிரிகள், ஆந்த்ரோபிக்கின் கிளாட் மாதிரிகளில் இயங்குகிறது, மற்ற மாதிரிகள் பின்னர் சேர்க்கப்படும்.

பயனர்கள், குழு உறுப்பினர்களாக செயல்படும் "இணைப் பணியாளர் முகவர்களை" உருவாக்கலாம்; அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இருக்கும், மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் தகவல்களை மட்டுமே அணுக முடியும்.

நிதி சேவைகள் மற்றும் சட்டப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பதிப்புகள், தற்போது முன்னோட்ட நிலையில் உள்ளன, மேலும் அரசு, சுகாதாரம் மற்றும் சில்லறை வணிகத்திற்கான பதிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT