அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 279-க்கு நெட்பிளிக்ஸ் உள்பட பல ஓடிடி சந்தா வழங்கும் ஏர்டெல்

இதன் மூலம் பயனர்கள் டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்களை பெறலாம்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல். அவ்வப்போது தனது ரீசார்ஜ் விலைகளை மாற்றியும், புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

அந்த வரிசையில் ஏர்டெல் தனது சலுகைகளில் ரூ.279 பிரீபெயிட் திட்டத்தை வழங்குகிறது. இந்த பிரீபெயிட் திட்டம், டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்களை விரும்பும் பயனர்களுக்கானது ஆகும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.279 பிரீபெயிட் திட்டத்துடன் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை வரம்பில் கிடைக்கும் மிகப்பெரிய ஓ.டி.டி. பலன்களில் இதுவும் ஒன்றாகும். நெட்பிளிக்ஸ் உலகின் முன்னணி ஓ.டி.டி. தளமாகும். இந்தியாவில், நெட்ஃளிக்ஸ் பேசிக் மாதம் ரூ.199 விலையில் கிடைக்கிறது.

ஓ.டி.டி. ரீசார்ஜ் முழு விவரம்:

ஆனால் இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் மட்டுமின்றி வேறு ஓ.டி.டி. பலன்களும் உள்ளன. பாரதி ஏர்டெல் ரூ.279 பிரீபெயிட் திட்டத்தில் 30GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இது ஒரு மாத கால வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே, உங்களிடம் சேவை செல்லுபடி காலத்துடன் கூடிய ரீசார்ஜ் திட்டம் இல்லையென்றால், உங்களால் இதைப் பயன்படுத்த முடியாது.

இந்த ரூ.279 திட்டமானது, எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் ஒரு பகுதியாக நெட்பிளிக்ஸ் பேசிக், ஜியோஹாட்ஸ்டார் பேசிக், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம் மற்றும் சோனிலிவ்+ மற்றும் 18 ஓ.டி.டி. நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஓ.டி.டி. பலன்களில் ஒன்றாகும். இந்தத்திட்டத்துடன் டேட்டா வவுச்சரும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்களை பெறலாம்.

ரூ. 200 ஓ.டி.டி. ரீசார்ஜ்:

ஏர்டெல் இதுதவிர சற்றே குறைந்த விலையில் ரூ. 200 ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் சேர்க்கப்படவில்லை, ஆனால் இது பயனர்களுக்கான முக்கிய ஓ.டி.டி. நன்மையை வழங்குகிறது. ரூ.200 திட்டத்துடன் 30GB டேட்டாவும் வருகிறது. இந்த திட்டம் தனியாக 28 நாட்கள் செல்லுபடியாகும்.

இந்த திட்டத்துடன் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல், ஜீ5 பிரீமியம், மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் ஒரு பகுதியாக சோனிலிவ் + 18 OTT-க்கள் வழங்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT