புதிய கேஜெட்டுகள்

ரூ. 44,300 விலையில் அறிமுகமான ரே-ரபான் மெட்டா ஜென் 3 - அம்சங்கள், முழு விவரங்கள்

கேமரா திறன்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், தனது வருடாந்திர மாநாடான 'மெட்டா கனெக்ட்'-ஐ புதன்கிழமை அன்று தொடங்கியது. இந்நிறுவனம், ரே-பான் மெட்டா ஜென் 3 மற்றும் மெட்டா விஆர் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தி, தனது ஏஐ அணியக்கூடிய சாதனங்களின் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த விஆர் கண்ணாடிகள் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், மெட்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை ரே-பான் மெட்டா கண்ணாடிகளை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.

இந்த புதிய தலைமுறை கண்ணாடிகள், நன்கு அறியப்பட்ட வேஃபேரர் மாடலுடன், ஏவியேட்டர் மற்றும் ஸீனா உள்ளிட்ட கூடுதல் ஃபிரேம் ஸ்டைல்களையும் சேர்த்து, இந்த சீரிசை விரிவுபடுத்துகின்றன.

ரே-பான் மெட்டா ஜென் 3 கண்ணாடிகள், பேட்டரி ஆயுள், ஆடியோ பதிவு, கேமரா திறன்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.

புதிய AI கண்ணாடி அறிமுகம்:

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, ​​ரே-பான் மெட்டா ஜென் 3-இல் உள்ள மிக முக்கியமான மாற்றம் பேட்டரி ஆயுள் ஆகும். மெட்டாவின் இந்த சமீபத்திய ஸ்மார்ட் கண்ணாடிகள், ஜென் 2-இல் எட்டு மணிநேரம் வரை இருந்த பயன்பாட்டு நேரத்தை விட, இப்போது ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸ் கூடுதலாக 50 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது, அதேசமயம் ஜென் 2-இன் கேஸ் 48 மணிநேரம் வரை மட்டுமே வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜென் 3, ஆறு மைக்ரோபோன்களை கொண்ட அமைப்பை பயன்படுத்துகிறது. இது 90 சதவீதத்திற்கும் அதிகமான பின்னணி இரைச்சலை குறைக்கும் என்று மெட்டா நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக இரைச்சல் மிகுந்த அல்லது காற்று வீசும் சூழல்களில், குரல் கட்டளைகளையும் அழைப்புகளையும் மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

மேலும், இது மெட்டா ஏஐ-ஐ விரைவாக அணுகுவதற்காக, தனிப்பயனாக்கக்கூடிய ஒரு புதிய செயல்பாட்டு பட்டனையும் சேர்க்கிறது. டால்பி அட்மாஸ் கேப்சருக்கான ஆதரவையும் தாங்கள் தயாரித்து வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது. இது, ஸ்பேஷியல் ஆடியோவுடன் வீடியோக்களை பதிவுசெய்ய பயனர்களை அனுமதிக்கும். இந்த வசதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரே-பான் மெட்டா ஜென் 3 விலை:

ரே-பான் மெட்டா ஜென் 3, இந்தியாவில் வேஃபேரர், ஏவியேட்டர் மற்றும் ஸீனா ஃபிரேம் ஸ்டைல்களில் கிடைக்கிறது. இந்நிறுவனம், கருப்பு, ஹவானா மற்றும் சீசனல் வண்ண தேர்வுகள் உட்பட, உலகளவில் 27 வண்ண மற்றும் லென்ஸ் கலவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில், மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய ஏஐ கண்ணாடிகளான ரே-பான் மெட்டா ஜென் 3 அவியேட்டர், வேஃபேரர் மற்றும் ஜெனா வடிவமைப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட லென்ஸ் மற்றும் ஃபிரேம் காம்பினேஷன்களுடன், ரூ. 44,300 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. இதன் டிரான்சிஷன்ஸ் வேரியன்ட்களின் விலை ரூ. 50,100 ஆகவும், போலரைஸ்டு வேரியன்ட்களின் விலை ரூ. 46,500 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT