மொபைல்ஸ்

Mid Range-இல் புது M சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M47 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஜென் இசட் இளம் தலைமுறையினரை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் பல நாள் பேட்டரி பேக்கப் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M47 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸருடன் அதிவேகமான LPDDR5X RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி M47 5ஜி அம்சங்கள்:

6.7 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ இன்பினிட்டி ஓ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 710 GPU

6 ஜிபி, 8 ஜிபி LPDDR5X ரேம்

128 ஜிபி, 256 ஜிபி UFS 3.1 மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 8.5

50MP பிரைமரி கேமரா, OIS

8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

2MP மேக்ரோ சென்சார்

12MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்

5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி

6000mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி M47 5ஜி ஸ்மார்ட்போன்: ரோக் ரெட் மற்றும் பிளேஸ் புளூ என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 22,999 எ துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 04-ஆம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.