சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி M47 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ருஇக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்ற நிலையில், தற்போது இதன் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவல்களின் படி கேலக்ஸி M47 ஸ்மார்ட்போனில் க்ரிம்சன் பினிஷ் மற்றும் மெட்டாலிக் ரெட் அக்சென்ட்க் இடம்பெற்று இருக்கும என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் இதன் முந்தைய வெர்ஷன்களுடன் ஒப்பிடும் போது அதிக பிரீமியம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும். இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒன் யுஐ 8 கொண்டிருக்கும்.
விலையை பொருத்தவரை ந்த ஸ்மார்ட்போன் அதிக போட்டி நிறைந்த ரூ. 25000 பட்ஜெட்டிற்குள் நிலை நிறுத்தப்படலாம். இந்த பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ, ரியல்மி மற்றும் மோட்டோரோலா பிராண்டுகளுக்கு போட்டியாக அமையும்.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அதிவேக செயல்திறன், சிறப்பான மல்டி டாஸ்கிங் அனுபவம் மற்றும் அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடலாக உருவாகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.