மொபைல்ஸ்

ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லாவா

புதிய லாவா ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

லாவா நிறுவனம் விராட் வி1 மற்றும் விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சில வாரங்களில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட் 4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

அளவில் சற்றே சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் லாவா ஸ்மார்ட் 4 மாடல் முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குவோர் மற்றும் இரண்டாவது ஸ்மார்ட்போனாக பயன்படுத்த விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது குறுந்தகவல் மற்றும் அழைப்புகள் போன்ற அடிப்படை பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

லாவா ஸ்மார்ட் 4 மாடலில் 6.59 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்ட டிஸ்ப்ளே, qHD ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் SC9863A சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 28 மில்லிமீட்டர் பிராசஸர் யூனிட் ஆகும். இதே பிராசஸர் தான் லாவா விராட் வி1 4ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. அழைப்புகள், குறுந்தகவல், பிரவுசிங் என அடிப்படை பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் ஏற்றதாக இருக்கும்.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் சீரான அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடல் MIL-STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள டூயல் சிம் ஸ்லாட் கொண்டு பயனர்கள் ஒரே நேரத்தில் இரு 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.

விலை விவரங்கள்:

புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொனார்க் கோல்டு மற்றும் அஜந்தா கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.