மொபைல்ஸ்

ஏ.ஐ. வசதியுடன் நோக்கியா ஃபீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்!

புதிய நோக்கியா ஃபீச்சர் போன் மாடல்கள் ஏ.ஐ. வசதியுடன் வருகிறது.

ஹெச்.எம்.டி. நிறுவனம் நோக்கியாவின் பாரம்பரிய ஃபீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த முறை புதிய ஃபீச்சர் போன் மாடல்கள் ஏ.ஐ. வசதியுடன் வருகின்றன. பாரம்பரிய நோக்கியா ஃபீச்சர் போன் தோற்றத்தில் அசத்தலான ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதி புதிய மொபைல் மாடல்களின் விசேஷ அம்சம் ஆகும்.

பல மாடல்கள்:

நோக்கியா 200 4ஜி, நோக்கியா 210 4ஜி, நோக்கியா 215 4ஜி 2nd எடிஷன் மற்றும் நோக்கியா 235 4ஜி 2nd எடிஷன் என மொத்தம் நான்கு புதிய மாடல்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நான்கு புதிய மாடல்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்த ஃபீச்சர் போன்களில் பிரத்யேக ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இந்த நான்கு மாடல்களும் நான்கு வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகள் மற்றும் பிரத்யேக ஏ.ஐ. அம்சங்களை கொண்டுள்ளன. முதற்கட்டமாக இந்த புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் விலை மற்றும் விற்பனை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

அம்சங்கள்:

நோக்கியா 200 4ஜி மற்றும் நோக்கியா 210 4ஜி மாடல்களின் அம்சங்களை பொருத்தவரை 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளேவும், நோக்கியா 215 4ஜி 2nd எடிஷன் மற்றும் நோக்கியா 235 4ஜி 2nd எடிஷன் மாடல்களில் 2.8 இன்ச் QVGA IPS பேனல் வழங்கப்பட்டுள்ளது. நான்கு மாடல்களும் புதிதாக உருவாக்கப்பட்ட எஸ்30 பிளல் ஓ.எஸ். கொடுள்ளது.

புது ஓ.எஸ். கொண்டு மொபைலின் அடிப்படை அம்சங்களான ஃபிளாஷ், கேமரா திறப்பது, ரிமைன்டர் வைப்பது மற்றும் அழைப்புகளை மேற்கொள்வது போன்ற அம்சங்களை வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் இயக்க முடியும்.

கட்டணம்:

முதற்கட்டமாக இந்த ஏ.ஐ. அம்சங்கள் மொபைல் வாங்கிய நாள் தொடங்கி முதல் 180 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அதன் பிறகு பயனர்கள் ஏ.ஐ. சந்தா பெற்று இந்த அம்சங்களை பயன்படுத்தலாம்.

இதுதவிர இந்த மொபைல் வாங்குவோருக்கு கிளவுட் போன் ஸ்டோரேஜ் சப்போர்ட் வசதியும் வழங்கப்படுகிறது. புதிய நோக்கியா 200 சீரிஸ் மாடல்கள் 1450mAh பேட்டரி, ப்ளூடூத், 3.5mm ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.