தொழில்நுட்பம்

AI மூலம் உலக சாதனை: 'Kimi K3.1 Pro' மாடலை அறிமுகப்படுத்தியது Moonshot AI- நவம்பர் 4-ல் வெளியீடு!

தற்போது இந்த புதிய ஏஐ மாடல்கள் Kimi.ai, Kimi Work, Kimi Code மற்றும் Kimi API உள்ளிட்ட அனைத்து முக்கிய தளங்களிலும் பயன்பாட்டிற்காகக் கிடைக்கின்றன.

சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான மூன்ஷாட் ஏஐ, உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தனது புதிய 'கிமி கே3.1 ப்ரோ' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான மூன்ஷாட் ஏஐ, உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தனது புதிய 'கிமி கே3.1 ப்ரோ' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

3 டிரில்லியன் அளவு அளவுகோல் கொண்ட இந்த ஓபன்-வெயிட் செயற்கை நுண்ணறிவு மாதிரி, ஒரே நேரத்தில் 1 மில்லியன் டோக்கன்களை கையாளும் திறன் கொண்ட மிகப்பெரிய 'கண்டெஸ்ட் விண்டோவை' கொண்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் நீண்ட ஆவணங்கள், விரிவான நிரலாக்க கோப்புகள் மற்றும் நிதிசார் தரவு ஆவணங்களை ஒரே சமயத்தில் பதிவேற்றி துல்லியமான முடிவுகளைப் பெற முடியும்.

அதிவேக செயல்திறன்

இந்த புதிய தொடரின் ஒரு பகுதியாக, வழக்கமான மாடலை விட 2 முதல் 3 மடங்கு அதிக வேகம் மற்றும் துடிப்புடன் இயங்கக்கூடிய 'கிமி கே3.1 ப்ரோ ஹைஸ்பீடு' என்ற சிறப்பு மாறுபாடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல்கள் கோட் எழுதுவது, மென்பொருள் உருவாக்குவது, 3D கிரியேஷன் மற்றும் சிக்கலான நிதிசார் ஆராய்ச்சிப் பணிகளை மிகத் துல்லியமாக நிறைவேற்றும் திறன் கொண்டவை என மூன்ஷாட் ஏஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக, நிரலாக்கப் பணிகளில் மனிதர்களின் தலையீடு இன்றி முழுமையான திட்டங்களை இறுதி செய்யும் அளவுக்கு இதன் ஏஐ ஏஜென்ட் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்த புதிய ஏஐ மாடல்கள் Kimi.ai, Kimi Work, Kimi Code மற்றும் Kimi API உள்ளிட்ட அனைத்து முக்கிய தளங்களிலும் பயன்பாட்டிற்காகக் கிடைக்கின்றன. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதிக்குள் இந்த மாதிரிக்கான முழுமையான மாதிரி எடைகளை பொதுவெளியில் முழுமையாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. உலகளாவிய ஏஐ தொழில்நுட்ப சந்தையில் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் இந்த புதிய வெளியீடு, டெவலப்பர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT