விளையாட்டு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் இன்று தொடக்கம்- செரீனாவின் வருகையால் எகிறும் எதிர்பார்ப்பு!

ஒற்றையரில் வாகை சூடும் வீரர், வீராங்க க்கு தலா ரூ.46 கோடி வழங்கப்படும்.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் 3-வதாக வரும் கவுரவமிக்க விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜானிக் சினெர் (இத் தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 7 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர் பியா), அமெரிக்காவின் பென் ஷெல்டன், ரஷியாவின் மெட்விடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. என்றாலும் சினெர் பட்டத்தை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது. அவர் முதல் சுற்றில் செர்பியாவின் கேக்மனோவிச்சுடன் மோதுகிறார்.

பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா, கோகோ காப் (அமெ ரிக்கா).

பிரெஞ்சு ஓபன் சாம்பியனான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) உள்ளிட்டோர் இடையே குடுமிபிடி நில வுகிறது. அது மட்டுமின்றி ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு 4 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் செய்யும் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

44 வயதான செரீனா முதல் சுற்றில் 20 வயதான ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்டை நாளை சந்திக்கிறார்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.820 கோடியாகும். ஒற்றையரில் வாகை சூடும் வீரர், வீராங்க க்கு தலா ரூ.46 கோடி வழங்கப்படும். முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.