இந்திய தடகள பெடரேசன், விளையாட்டுத்துறையில் சாதித்த பயிற்சியாளர்கள், வீரர்கள், டெக்னிக்கல் அதிகாரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களுடைய சாதனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கி விழாவை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன் முதல் விழா இன்று நடைபெற்றது. இதில் பி.டி. உஷா, அஞ்சும் ஜார்ஜ், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் வீரர் குர்பசான் சிங் ரந்தவா (decathlete), முன்னாள் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பகதூர் சிங் சவுகான் ஆகியோருக்கு வாழ்நாள் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த விருது தொடர்பாக பி.டி. உஷா கூறுகையில் "நான் இந்த விருதை வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், நான் இந்த விருக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்தியாவில் பெரும்பாலான நேரத்தில், நீங்கள் விண்ணப்பிகவில்லை என்றால், விருதுகள் வழங்கப்படாது. என்னுடைய பெடரேசனில் இருந்து மிகச் சிறந்த முயற்சி" என்று தெரிவித்துள்ளார்.