டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் ஜீன் ஜுலியன் ரோஜர்-அமெரிக்காவின் தியோடர் வினிகர் ஜோடி உடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றோடு யூகி பாம்ப்ரி ஜோடி வெளியேறியது.

இதேபோல், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-பிரேசிலின் மெர்செலோ டெமோலைனர் ஜோடியும் முதல் சுற்றோடு வெளியேறியது.

இந்தியாவின் அனிருத் சந்திரசேகர்-ஜப்பானின் டகேரு யுசூகி ஜோடியும் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.