கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.
இதில் நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.
ஆரம்பமே முதலே அதிரடியாக ஆடிய முசோவா 7-6 (7-4), 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் கரோலினா முசோவா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதுகிறார்.
இன்று நடைபெறும் காலிறுதியில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுடனும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடனும் மோதுகிறார்.
முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.