விளையாட்டு

சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்

இந்தியா சார்பில் 17 பேர் போட்டியில் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர்.போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பரத் விஷ்ணுவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு.

மாலை மலர்

சர்வதேச கிக் பாக்சிங் போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 17 பேர் போட்டியில் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர். இவற்றில் 14 வயதான தமிழக வீரர் பரத்விஷ்ணு அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரைச் சேர்ந்த பரத் விஷ்ணு போட்டி முடிந்து தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, பரத் விஷ்ணுவை வரவேற்ற தலைமை பயிற்சியாளர் சி.சுரேஷ்பாபு, தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் பெண்கள் கமிட்டி சேர்மன் டாக்டர் ஆர்த்தி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.