கால்பந்து விளையாட்டில் உயரிய விருதான பலோன் டி'ஓர் பரிந்துரை பட்டியலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. இந்த உயரிய விருதுக்கு தனது முதல் பரிந்துரை முதல் இறுதி பரிந்துரை வரை 20 ஆண்டுகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றறுள்ளார். எந்த வீரரும் இவ்வளவு நீண்ட காலத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டதில்லை.
இந்த பலோன் டி'ஓர் பரிந்துரையில் மெஸ்ஸி தற்போது முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரொனால்டோ 18 ஆண்டுகளுடனும், லூகா மோட்ரிச் 16 ஆண்டுகளுடனும், கரீம் பென்சிமா 15 ஆண்டுகளுடனும் மற்றும் பாலோ மால்டினி 14 ஆண்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இது மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் பெறப்படும் 17-வது பலோன் டி'ஓர் பரிந்துரையாகும். 2006 ஆம் ஆண்டு தனது முதல் பலோன் டி'ஓர் பரிந்துரையைப் பெற்ற மெஸ்ஸி, தற்போது 2026 இலும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார்.
2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா தகுதிபெற மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம் உதவியது. குறிப்பாக அந்தத் தொடரில் மட்டும் எட்டு கோல்களை அடித்து, நான்கு கோல்களுக்கு உதவியும் செய்தார். கிலியன் எம்பாப்பே அவரை முந்திச் செல்வதற்கு முன்பு, 21 கோல்களுடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் இந்த பரிந்துரை மற்றுமொரு அத்தியாத்தை ஏற்படுத்தியிருக்கிறது.