2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணை நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் நகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், செப்.24ம் தேதி அன்று கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.
இந்தியாவின் தொடக்க ஆட்டம் செப்டம்பர் 28 அன்று நடைபெற உள்ளது. இந்திய ஆண்கள் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்குவார் என்றும், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். அமோல் மஜும்தார் இந்திய பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்கிறார்.
இதற்கு முன்னர், சீனாவின் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் லக்ஷ்மணை இந்திய அணிக்குப் பயிற்சியளித்தார். அப்போது ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது.
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், மற்றும் வைபவ் சூர்யவன்ஷி.
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், குணாளன் கமலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், மற்றும் நந்தனி சர்மா.