

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஜஸ்பிரீத் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், தங்களது உடற்தகுதி சான்றிதழைப் பெறுவதைப் பொறுத்தே விளையாடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் அதே அணிதான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், இலங்கை தொடரை முழங்கால் காயம் காரணமாக தவறவிட்ட பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் உடற்தகுதியை வைத்தே விளையாடுவாரா, இல்லையா என்பது தெரியவரும்.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் செப்டம்பர் 13 முதல் 17 வரை, தேசிய தலைநகரில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளன.