விளையாட்டு

155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து... தொடரை சமன் செய்யுமா இந்தியா?

முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அயர்லாந்து முன்னிலையில் உள்ளது.

அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதிவருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து வென்ற நிலையில் இன்று பெல்பாஸ்ட் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது.

அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 53 ரன்களும், பென் கலிட்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்சித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 155 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங் செய்யவுள்ளது. இந்தியா இப்போட்டியில் வென்றால் தொடர் சமனில் முடியும். இல்லையெனில் 2-0 என்ற கணக்கில் தொடரை அயர்லாந்து கைப்பற்றும்.