19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளு டன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.
இந்த போட்டி தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணியின் கேப்டன் அக்ஷர் பட்டேல் (இடது), பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்.
பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக). ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், குஜராத், ஐதராபாத் அணிகளுக்கு எதி ராக) 13 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை தொடாத அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச் சியாக தோற்று சரிவை சந்தித்துள்ளது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (4 அரைசதத்துடன் 364 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (4 அரைசதத்து டன் 333), கூப்பர் கனோலி (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 377), பிரியான்ஷ் ஆர்யா (286), மார்கஸ் ஸ்டோனிஸ் நல்ல நிலை யில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (11 விக்கெட்), விஜய்குமார் வைஷாக், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் இன்னும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 7 தோல்வி கண்டு 'பிளே-ஆப்' சுற்றை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றால் முழுமையாக முடிந்து போகும். கடந்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் ஜெயித்தது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 468 ரன்கள்), பதும் நிசாங்கா (278), டிரிஸ் டான் ஸ்டப்ஸ் (259), சமீர் ரிஸ்வி (252), நிதிஷ் ராணாவும் (225), பந்து வீச்சில் அக்ஷர் பட்டேல், லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ். மிட்செல் ஸ்டார்க்கும் வலுசேர்க்கின்றனர்.
பஞ்சாப் அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற முனைப்பு காட்டும். இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் டெல்லி அணி நெருக்கடியின்றி விளையாடும். அத்துடன் பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முழுமுயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப் அணியும், 17-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா. பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கனோலி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், சூர் யான்ஷ் ஷெட்கே. ஷசாங் சிங், மார்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக், லோக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்,
டெல்லி: பதும் நிசாங்கா. லோகேஷ் ராகுல், நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்). அஷூதோஷ் ஷர்மா. விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க். லுங்கி இங்கிடி, முகேஷ் குமார், குல்தீப் யாதவ்.