அஸ்மிதா டே
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை அஸ்மிதா டே

இந்தியா பதக்க பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. 3 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஜூடோ போட்டிகள் நடைபெற்றன.

பெண்களுக்கான காலிறுதியில் இந்திய வீராங்கனை அஸ்மிதா டே 48 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஈவா எவிங்கை 100-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பதக்கப் பட்டியல்

அரையிறுதிக்கு முன்னேறியதால், வெண்கல பதக்கம் இதன் மூலம் உறுதியாகும். அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

இந்தியா பதக்க பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. 3 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 51 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 15 தங்கம், 30 வெள்ளிப் பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கனடா 15 தங்கம், 13 வெள்ளிப் பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.