காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்: இன்று தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

இந்திய அணி 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கம் வென்றுள்ளது.
neeraj chopra
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்தியா 10வது இடம்

ஏழாவது நாள் முடிவில் இந்திய அணி 3 தங்கம், 10 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று பத்தாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டின் 8-வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு:

தடகளம் : டெகத்லான் வட்டு எறிதல் - தேஜஸ்வின் சங்கர் (மாலை 3.20 மணி).

4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம் தகுதி சுற்று -விஷால், ராஜேஷ் ரமேஷ், ராஷ்தீப் கவுர், நீரு பதக் (மாலை 4.05).

டெகத்லான் போல் வால்ட் ( மாலை 5.00).

டெகத்லான் ஈட்டி எறிதல் (இரவு 11.30).

தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி - நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ், யஷ்வீர் சிங் ( நள்ளிரவு 12.45).

டெகத்லான் 1,500 மீட்டர் ஓட்டம் (நள்ளிரவு 1.05).

400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் இறுதிப்போட்டி - சந்தோஷ் குமார் தமிழரசன், யாஷ்காஸ் பாலக் ஷா (நள்ளிரவு 1.30).

குத்துச்சண்டை: அரையிறுதி போட்டிகள்

பிரீத்தி பவார்: பெண்கள் 54 கிலோ பிரிவு ( மாலை 3.15).

அங்குஷ் பங்கல்: ஆண்கள் 80 கிலோ பிரிவு ( மாலை 4.30).

ஜாஸ்மின் லம்போரியா: பெண்கள் 57 கிலோ பிரிவு (இரவு 7.15).

அருந்ததி சவுத்ரி: பெண்கள் 70 கிலோ பிரிவு (இரவு 7.30).

ஜடுமணி சிங்- ஆண்கள் 55 கிலோ பிரிவு ( இரவு ‌8.15).

சாக்‌ஷி சவுத்ரி: பெண்கள் 51 கிலோ பிரிவு (இரவு 11.30).

பிரியா கங்காஸ் - பெண்கள் 60 கிலோ பிரிவு (நள்ளிரவு 12.15).

லவ்லினா போர்கோஹைன்: பெண்கள் 75 கிலோ பிரிவு (நள்ளிரவு 12.45 ).

சச்சின் சிவாச் - ஆண்கள் 60 கிலோ பிரிவு (நள்ளிரவு 1.15 ).

நரேந்தர் பெர்வால்: ஆண்கள் 90கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு (நள்ளிரவு 1.30).

லான் பவுல்ஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா -(நவ்நீத் - தினேஷ்குமார்) பால்க் லேண்ட் தீவு மோதல் (மாலை 5.15).

பெண்கள் ஒற்றையர் பிரிவு இந்தியா (நயன்மணி சைகியா ) ஜாம்பியாவுடன் மோதல் (இரவு 10.2).

இதுதவிர ஜூடோ, டிராக் சைக்கிள் பந்தயத்திலும் இந்தியர்கள் பங்கேற்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com