கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: கனடாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது மொராக்கோ

2வது சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறின.

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்தச் சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பராகுவே, பிரான்ஸ், கனடா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, எகிப்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

இதில் நேற்று இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டியில் கனடா, மொராக்கோ அணிகள் மோதின.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 0-0 என இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மொராக்கோவின் அஜெடின் ஆவ்னாஹி 50-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்திலும் அவர் மேலும் ஒரு கோல் அடித்தார். கூடுதல் நேரத்தில் மொராக்கோவின் சவுபியான் ரகீமி (98) மற்றொரு கோல் போட்டார்.

இறுதியில், மொராக்கோ அணி 3-0 என கனடா அணியை பந்தாடியதுடன் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.