விராட் கோலி- ஹாரி கேன்
கால்பந்து

விராட் கோலியின் வாழ்த்து என்னை பெரிதும் வியக்க வைத்தது: ஹாரி கேன்

பலோன் டி'ஆர் விருதை வென்ற ஹாரி கேனுக்கு பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இங்கிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஹாரி கேன், பெயர்ன் முனிச் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2026 உலக கோப்பை முடிவடைந்த நிலையில், கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஆர் விருதுக்கான போட்டியில் ஹாரி கேன் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.

பலோன் டி'ஆர் விருதை முதல் முறையாக வென்ற ஹாரி கேன்

ஹாரி கேன் முதன் முதலாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். பலோன் டி'ஆர் விருதை வென்ற அவருக்கு பல்வேறு நட்சத்திரங்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

விராட் கோலி வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். விராட் கோலி "கால்பந்து அரங்கில் இத்தனை ஆண்டுகளாக ஹாரி கேன் வெளிப்படுத்திய மன உறுதி, கடின உழைப்பு, நேர்மைக்கு கிடைத்த பரிசு பலோன் டி'ஆர் விருது. இது அவருக்கு தகுதியானது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்த்துகள்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஹாரி கேனிடம், "உங்களுக்கு வந்த வாழ்த்து செய்திகளில் எது உங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஹாரி கேன் கூறுகையில், "எனக்கு மிகவும் பிடித்தமான நாயகர்களில் ஒருவரான டேவிட் பெக்காம், டாம் பிராடி, விராட் கோலி என நான் பெரிதும் மதிக்கும் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் எனது நெருங்கிய நண்பரான எட் ஷீரன் ஆகியோரிடமிருந்து வந்த வாழ்த்துகள் என்னைப் பெரிதும் வியக்க வைத்தன" என்று தெரிவித்தார்.

பலோன் டி'ஆர் விருக்கு எப்படி தேர்வு செய்யப்படுகிறது?

கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில், 1956 முதல் பலோன் டி'ஆர் விருது வழங்கப்படுகிறது. உலக கால்பந்து பிபா’ தரவரிசையில் ‘டாப்– 100 பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்வார்கள்.

மெஸ்சி, ரொனால்டோ அபாரம்

அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (8 முறை), போர்ச்சுகலின் ரொனால்டோ (5) அதிக முறை இவ்விருது வென்றனர். 2026-ம் ஆண்டு விருதுக்கான டாப்– 10 பட்டியலில் மெஸ்சி, எம்பாப்வே, லமின் யமால், எர்லிங் ஹாலண்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். முடிவில் சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி கேன் தேர்வு செய்யப்பட்டார்.

பேயர்ன் முனிச்

ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடும் ஹாரி கேன், நடப்பு சீசனில் இங்கிலாந்து மற்றும் கிளப் அணிகளுக்கான களமிறங்கி 65 போட்டிகளில் 73 கோல் அடித்துள்ளார்.

ஸ்டான்லே மாத்யூஸ் (1956), டெனிஸ் லா (1964), பாபி சார்ல்டன் (1966), கேவின் கீகன் (1978, 79), மைக்கேல் ஓவனுக்கு (2001) அடுத்து, இந்த விருது வென்ற 6-வது இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஆவார். இதைத் தவிர 25 ஆண்டுக்கு பின் இவ்விருது பெற்ற இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஆவார்.

உலக கோப்பை போட்டியில் 6 கோல்கள்

2026-ல் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரில் 7 போட்டிகளில் 6 கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது. 3-வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை 6-4 என வீழ்த்தியது.

SCROLL FOR NEXT