கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: பெனால்டி முறையில் ஜெர்மனி அணியை வீழ்த்தியது பராகுவே

ஆட்டத்தின் முதல் பாதி வரை பராகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகள் மோதின. பாஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.

பரபரப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தின் 42-ஆவது நிமிடத்தில் பராகுவே அணியின் மத்யாஸ் கலார்ஸா அசிஸ்ட்-இல் ஜூலியோ என்கிசோ கோல் அடிக்க அந்த அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி வரை பராகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது.

சமநிலை:

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் வீரர்களை மாற்றும் படலத்தை தீவிரப்படுத்தி கோல் கணக்கை தொடங்க ஜெர்மனி அணியும், கோல் கணக்கை அதிகப்படுத்த பராகுவே அணியும் முனைப்பு காட்டின. இதில் ஜெர்மனி அணியின் ப்ளோரியன் விர்ட்ஸ் அசிஸ்ட்-இல்கை ஹவெர்ட்ஸ் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.

இதன்பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளாலும் கோல் கணக்கை அதிகப்படுத்த முடியவில்லை. இதனால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. எனினும், கூடுதல் நேரம் முடியும் வரையிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

பெனால்டி முறை:

இதனால் பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. பெனால்டி முறையில் முதலில் ஷூட் செய்த ஜெர்மனி அணி கோல் அடிக்க தவறியது. இதை பயன்படுத்தி பராகுவே கோல் அடித்து பெனால்டியில் முன்னிலை பெற்றது. அடுத்த இரு வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன.

நான்காவது ஷூட் அவுட்டில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. கடைசியில் ஜெர்மனி அணிக்கு எதிராக பராகுவே அணி 3-4 கணக்கில் வெற்றி பெற்றது.