உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 38-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
அர்ஜென்டினா அணியின் ஃபகுன்டோ மெதினா வழங்கிய அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திய லியோனல் மெஸ்ஸி தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதன் காரணமாக அர்ஜென்டினா அணி ஆட்டத்தின் முதல் பாதி வரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
மெஸ்ஸி அபாரம்:
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஆஸ்திரியா ஒருபக்கம் கோல் கணக்கை தொடங்கவும், மறுப்பக்கம் அர்ஜென்டினா அணி கோல் கணக்கை அதிகப்படுத்தவும் தீவிரம் காட்டின. எனினும், கோல் கணக்கில் மாற்றம் இல்லாமல் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னணி வகித்து வந்தது.
ஆட்டத்தின் இறுதியில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அணிக்கு மற்றொரு கோல் அடிக்க அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையை வலுப்படுத்தியது.
இறுதியில் ஆட்டத்தின் நேரம் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரியா கடைசி வரை கோல் கணக்கை தொடங்க முயற்சித்தது. எனினும், அந்த அணியின் முயற்சிக்கு பலனளிக்கவில்லை. இறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.