விளையாட்டு

மேற்கித்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டி - சுப்மன், விராட் சதம் விளாசி அசத்தல்... 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

2 விக்கெடுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

கேரளத்தில் இன்று ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்திய தரப்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிரடியாக சதமடித்து அசத்தினார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 41வது ஓவரிலேயே இலக்கை எட்டி, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. விராட் கோலி, சுப்மன் சதம் விளாசி அதிரடி காட்டினர்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அல்சரி ஜோசப், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT