ஐசிசி 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக, இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கைக்கு, இந்தியா மேற்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இலங்கைக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என்று கைப்பற்றி வென்றது.
இந்நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கையில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியானது கல்லே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 23 முதல் 27 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.