மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஷபாலி வர்மா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
பவர்பிளேயில் இந்தியா 59 ரன்கள் எடுத்தது. யாஸ்திகா பாட்டியா 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தீப்தி ஷர்மா 21 பந்துகளில் 29 ரன்களும், ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், அருந்ததி ரெட்டி ஏழு பந்துகளில் ஆறு ரன்களுடனும், பிரேமா ராவத் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மொத்தமாக இந்திய அணி 158 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா சார்பில், மரிசான் கேப் தனது நான்கு ஓவர்களில் 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷப்னிம் இஸ்மாயிலும் நான்கு ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.