முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், நேற்று தொடங்கிய 2-வது போட்டியில் இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் லஹிரு உதரா சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிக்குவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2-வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி நேற்று ஆன்டிக்குவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் நிஷான் மதுஷ்கா மற்றும் லஹிரு உதரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மதுஷ்கா 6 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு நிஷான் மதுஷ்கா உடன் கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இநத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லஹிரு உதரா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவரின் 3-வது டெஸ்ட் போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய கமிந்து மெண்டிஸ் 120 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லஹிரு உதரா அரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 248 பந்துகளை சந்தித்த அவர் 188 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 21 பவுண்டரிகளும், 5 சிக்சர்களுடம் அடங்கும்.
அதன்பின் வந்த கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 90 பந்துகளை சந்தித்து 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு குசால் மெண்டிஸ் உடன் சோனல் தினுஷா ஜோடி சேர்ந்தார். 83 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், சோனல் தினுஷா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷமர் ஜோசப் 2 ரன்களும், அல்சாரி ஜோச், ஜெய்டன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.