இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
மான்செஸ்டரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதன்பின், ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது.
இந்நிலையில், தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:
இந்த ஆட்டத்தில் எங்கே தவறு நடந்தது என எல்லோருக்கும் தெரியும். எங்கெல்லாம் போட்டி கைநழுவிப் போனது என்பதை அறிவார்கள். ஆனால் நான் எந்த ஒரு குறிப்பிட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை.
15-வது ஓவருக்கு பிறகு அணியின் வேகம் குறைந்துவிட்டது. அவர் (பிஷ்னோய்) வீசிய அந்த ஒரு நோ பால் குறித்துச் சொல்ல வேண்டுமானால் அவர் அதிலிருந்து மீண்டு இன்னும் வலுவாக திரும்புவார் என நம்புகிறேன்.
17-வது ஓவரில் ஆட்டம் எங்கள் கையை விட்டு நழுவியது. இதில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆடுகளத்தில் 190 ரன் நல்ல ஸ்கோர் ஆகும். கடைசி ஓவரில் திலக் வர்மா எடுத்த ரன்கள் சிறப்பானது.
சூர்யவன்ஷியின் அறிமுகம் ஓர் அசைக்க முடியாத மன உறுதி இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் பதற்றம் அடைவார் என நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளாக அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரவி பிஷ்னோய் வீசிய ஆட்டத்தின் 17-வது ஓவரில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் எடுத்தது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 0-1 என பின்தங்கியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான3-வது டி20 போட்டி வரும் 7-ம் தேதி நடக்கிறது.