விராட் கோலி
கிரிக்கெட்

3-வது இடத்தில் 13 ஆயிரம் ரன்கள்: சரித்திரம் படைத்த விராட் கோலி

விராட் கோலி 318 போட்டிகளில் விளையாடி 15138 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 185 ரன்களில் சுருண்டது.

ரோகித் சர்மா டக்அவுட்

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருக்கும் போது ஒருநாள் கிரிக்கெட்டில் 3-வது இடத்தில் களம் இறங்கி 13 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

3-வது இடத்தில் 13 ஆயிரம் ரன்கள்

இதன்மூலம் 3-வது இடத்தில் களம் இறங்கி, 13 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் நீண்ட காலமாக 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடினார். இவர் 12,662 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கரா 9747 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கல்லீஸ் 7,774 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

15,138 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி

இன்றைய போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை விராட் கோலி 318 போட்டிகளில் விளையாடி 15,138 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 58.90 ஆகும். 55 சதங்களும், 79 அரைசதங்களும் அடித்துள்ளார்.

SCROLL FOR NEXT