

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா. இவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது, ஹாம்ஸ்டிரிங் காயம் காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிக்கான அணியில் காயத்தில் இருந்து குணமடைவதை பொறுத்து சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் கடந்த 30-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பெங்களூரு பிசிசிஐ சிறப்பு மையத்தில் போட்டிக்கு திரும்புவதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான உடற்குதியை கடந்த இரண்டு நாட்களாக நிரூபிக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மெடிக்கல் அணியும் அவர் உடற்தகுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக 7-ந்தேதி இந்தியா ஏ அணி, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்கான நியூசிலாந்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.