இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 296 இலக்கை 41.4 ஓவரில் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான சுப்மன் கில் (110), அடுத்து களம் இறங்கிய விராட் கோலி (139 நாட்அவுட்) சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்த சதம் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் விராட் கோலி 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் 816 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 796 புள்ளிகள் பெற்றுள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 5-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர அசாம் 6-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய குசால் மெண்டிஸ் 10-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 8-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 9-வது இடத்திலும், அயர்லாநது வீரர் ஹாரி டெக்டர் 10-வது இடத்திலும் உள்ளனர்.