டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் தில்பிரீத் பஜ்வா 39 பந்துகளில் 36 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், துவக்க வீரராக களமிறங்கிய யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.
இதனால் கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேகோப் டஃபி, கைல் ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.