சூர்யவன்ஷி
கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எடுத்த அதிரடி முடிவு..!

சூர்வன்ஷிக்கு 15 வயதே ஆவதால், அவர் பெற்றோரை அழைத்துச் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய அணி இந்த மாதம் இறுதி முதல் அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. டி20 இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். இவருக்கு 15 வயதாகிறது. இதனால் அவருடன் அவருடைய பெற்றோர்கள் உடன் செல்வார்கள். அவர்களுடைய செலவை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ECB மற்றும் ICC விதிமுறைகள்

இந்த நிலையில் இங்கிலாந்தில் விளையாடும்போது, சூர்யவன்ஷிக்கு தனி உடைமாற்றும் அறை வழங்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அவருக்கு 16 வயது முடிவடையாததால், 16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளின்படி (ECB மற்றும் ICC-யின் விதிமுறைகள்) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ECB தெரிவித்துள்ளது. அதேவேளையில், வீரர்களுடன் அறைகளில் ஆலோசனையில் ஈடுபடலாம். ஓட்டல் அறையில் பெற்றோருடன் தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு டி20 போட்டிகளில் விளையாட அயர்லாந்து செல்ல இருக்கிறார். ஆனால், அயர்லாந்து கிரிக்கெட் சங்கம் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ஐபிஎல்

ஐபிஎல் மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் சக வீரர்களுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT