இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அஷ்வினுக்கு ஐசிசி தலைவரான ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலமும் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய சிறந்த அறிவாலும் இந்திய அணியின் மிகசிறந்த மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். பெருமைப்பட வேண்டிய சர்வதேச கிரிக்கெட்டை அவர் விளையாடியுள்ளார். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
One of @bcci's greatest match-winners - a magician with the ball and an astute thinker of the game. An international career to be proud of @ashwinravi99, wishing you the best for the future. pic.twitter.com/6RKbiG8jsw